The principal

Mr.V.T.Jeyanthan SLPS-1

அதிபரின் உள்ளத்திலிருந்து

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தனது வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடைபோடும் வயாவிளான் மத்திய கல்லூரி வரும் ஆண்டில் பவள விழா காணுகிறது. இத்தருணத்தில் எமது கல்லூரியின் இணையத்தளம் புதுப்பொலிவுடன் மெருகூட்டப்பட்டுள்ளது. எமது கல்லூரியின் திறன்மிகு மாணவர்களின், கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட கல்வி சாராத சாதனைகளினையும், அவர்கள் பற்றிய விபரங்களையும் உத்தியோகபுர்வமாக அனைவரும் பெற்றிடுவதற்கு எமது இந்த இணையத்தளம் வழிசெய்யும். அத்தோடு, கல்லூரயின் உத்தியோகப்பற்றற்ற செய்திகளைப் புறக்கணிக்கவும் கல்லூரி பற்றிய உண்மைச் செய்திகளை வெளிப்படுத்தவும் உதவும். இந்த இணையத்தளத்தினூடாக இணைத்து மாணவர்களும் பயனடைவதோடு உலகெங்கும் வாழும் எம் வயவன்கள் ஒன்றிணைய ஓர் வாய்ப்பாகஅமையும் என்பது என் நம்பிக்கை.