School Anthem

கல்லூரிக் கீதம்

வயாவிளான் மத்திய கல்லூரி என்றும் வாழ்க
இயைவுறும் ஆசிரியரும் மாணவர்களும் வாழ்க (வயா)
செம்மை நெறிநில் என்னும் எங்கள்
சீரியவாய் மொழியின்
உண்மை உணர்த்தும் எண்ணும் எழுத்தும்
ஊக்கமுடன் பயில்வோம்
துணிவும் பணிவும் தொழில்கள் பலவும்
இணையும் கல்வியுடன்
இணையிற் கலைகள் பிறவும் நிறைவாய்
இயைவுடன் கற்றுயர்வோம்

(வயா)

மாணவர் நலனை மாண்புடன் நாளும்
பேணிவரும் அதிபர்
ஆள்நலப் பணியும் ஆற்றலும் வாய்ந்த
ஆசிரியர்களுடன்
செல்வச் சிறுவர் அன்புடன் ஒன்றாய்
சேர்ந்துநன் னெறிபயிலும்
கல்விக் கோயில் என்னத்திகழும்
கற்றவர் தினம் புகழும் (வயா)

இயற்றியவர்
கவிஞர் வி.கந்தவனம்
(முன்னாள் ஆசிரியர்)

OLYMPUS DIGITAL CAMERA