Flag Anthem

கொடிக் கீதம்

வயாவிளான் மத்திய கல்லூரி அன்னையின்
மாண்பினை உயர்த்தும் கொடி பறக்குதுபார்
பறக்குதுபார் கொடி பறக்குது பார்
கொடி பறக்குது பார் கொடி பறக்குது பார்

மாணவர் எமக்குயர்ந்த மேன்மைகளைத் தருகின்ற
மன்னுபேராலயத்தின் கொடி இது
மாநிலத்தின் மகிமைகளில் மலர்ந்துநாம் எழுந்திட நன்
மார்க்கங்களைத் தரும் கொடிதான் பறக்குது பார்

ஆண்மைதரும் கல்விகேள்வி அறிவியற் கலைகளோடு
ஆற்றல்பல தருகின்ற கொடி இது
அனுதினம் அகமகிழ்ந்து அறிவூட்டும் கல்லூரி
அன்னையவர் கொடியுயர்ந்து பறக்குதுபார்

சாதிமத பேதமின்றி சன்மார்க்க நெறிநிற்கும்
சால்பினை உயர்த்துகின்ற கொடி இது
சாந்தி சக்தி சோதி கீர்த்தி எங்கள் வாழ்வில் எய்திடவே
சாலவும் உழைக்கும் கொடி பறக்குது பார்

இயற்றியவர்
திரு.ஆ.சி.நடராசா
(முன்னாள் அதிபர்)